சட்ட விரோதமாக போதை ஊசிகள் விற்ற 2 பேர் கைது: 800 ஊசிகள் பறிமுதல்

தூத்துக்குடியில் மருத்துவர் பரிந்துரையின்றி சட்ட விரோதமாக போதை தரக்கூடிய மருந்து மாத்திரைகள் மற்றும் ஊசிகளை விற்பனை செய்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்ட விரோதமாக போதை ஊசிகள் விற்ற 2 பேர் கைது: 800 ஊசிகள் பறிமுதல்
Published on

தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட்ஜான் உத்தரவின்படி, தூத்துக்குடி நகர உட்கோட்ட ஏ.எஸ்.பி. மதன் மேற்பார்வையில், தாளமுத்துநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அருளப்பன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் முத்துராஜா மற்றும் போலீசார் நேற்று (11.6.2025) தாளமுத்துநகர் மொட்ட கோபுரம் கடற்கரை பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படி வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் அவர்கள் தாளமுத்துநகர் சமர்வியாஸ் நகரைச் சேர்ந்த மாடசாமி மகன் செல்வகுமார் (வயது 45) மற்றும் திரேஸ்புரம் பகுதியைச் சேர்ந்த முகமதுஇப்ராஹிம் மகன் ரஹீம்(48) ஆகியோர் என்பதும், அவர்கள் Tramadol Hydrochoride injection 50mg/ml என்னும் போதை ஊசிகளை மருந்து சீட்டு இல்லாமல் வெளியூரிலிருந்து சட்டவிரோதமாக வாங்கி விற்பனை செய்வதற்கு வைத்திருந்ததும் தெரியவந்தது.

உடனே மேற்சொன்ன போலீசார் செல்வகுமார், ரஹீம் ஆகிய இருவரையும் கைது செய்து, அவர்களிடமிருந்த Tramadol Hydrochoride injection 50mg/ml- 800 போதை ஊசிகள், ரூ.11,300 ரொக்க பணம் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து தாளமுத்துநகர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் மருத்துவர் பரிந்துரையின்றி சட்ட விரோதமாக போதை தரக்கூடிய மருந்து மாத்திரைகள் மற்றும் ஊசிகளை விற்பனை செய்பவர்கள் மற்றும் மருந்தக கடை உரிமையாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com