

தூத்துக்குடி,
தூத்துக்குடி புதூர் பேரூராட்சி பூங்கா அருகே சட்டவிராதமாக மதுபான விற்பனையில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், புதூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சின்னவனநாயக்கன்பட்டி பகுதியில் போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அங்கே சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை செய்தனர்.
அந்த விசாரணையில் அவர்கள் 2 பேரும், சின்னவனநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்தவர்களான செந்தில்குமார் (வயது 38), ரமேஷ்கண்ணன்(23) ஆகியோர் என்பதும், அவர்கள் 2 பேரும் சட்ட விரோதமாக மதுபான விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
இது தொடர்பாக புதூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ராஜேஷ் வழக்குப்பதிவு செய்து, மதுபான விற்பனையில் ஈடுபட்ட செந்தில்குமார், ரமேஷ்கண்ணன் ஆகிய 2 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 69 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்னர்.