கஞ்சா விற்ற 2 பேர் பிடிபட்டனர்

மண்ணாடிப்பட்டில் கஞ்சா விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கஞ்சா விற்ற 2 பேர் பிடிபட்டனர்
Published on

மண்ணாடிப்பட்டு ஏரிக்கரையில் பள்ளி மாணவர்கள், இளைஞர் களுக்கு கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் திருக்கனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் தலைமையில் போலீசார் ஏரிக்கரைக்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு கஞ்சா விற்றுக் கொண்டிருந்த 2 பேரை மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர்கள், மண்ணாடிப்பட்டு பெரிய காலனி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சுரேந்தர் (வயது 24), உருளையன்பேட்டை முருகன் கோவில் தெருவை சேர்ந்த ஜான்சன் (24) என்பதும், கஞ்சா விற்றதும் தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 88 கிராம் கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com