கஞ்சா விற்ற 2 பேர் கைது

உவரியில் கஞ்சா விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கஞ்சா விற்ற 2 பேர் கைது
Published on

திசையன்விளை:

உவரி போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி மற்றும் போலீசார் நேற்று உவரி சோதனை சாவடி அருகே வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 10 கிராம் எடை கொண்ட 20 கஞ்சா பொட்டலங்கள் விற்பனைக்கு கொண்டு சென்றது தெரியவந்தது. இதுதொடர்பாக திசையன்விளை மணலிவிளையை சேர்ந்த பொன் பெருமாள் (வயது 31), புளியடி தெருவை சேர்ந்த சிவமூர்த்தி (21) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கஞ்சா பொட்டலங்களையும், மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com