கஞ்சா விற்ற 2 பேர் கைது

கஞ்சா விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
கஞ்சா விற்ற 2 பேர் கைது
Published on

பாளையங்கோட்டை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பழனிமுருகன் மற்றும் போலீசார் பாளையங்கோட்டை மார்க்கெட் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்ற வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் செய்துங்கநல்லூர் அய்யனார்குளம்பட்டி பகுதியை சேர்ந்த முருகன் மகன் முத்து மனோகரன் (வயது 27) என்பதும், அவர் அந்த பகுதியில் கஞ்சா விற்றதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

தொடர்ந்து அதே பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பாளையங்கோட்டை பார்வதிஅம்மன் கோவில் தெருவை சேர்ந்த சரவணன் (45) என்பவரையும் போலீசார் கைது செய்தனர். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com