கோவில்பட்டியில் புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது: கார், பணம் பறிமுதல்


கோவில்பட்டியில் புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது: கார், பணம் பறிமுதல்
x

கோவில்பட்டி இளையரசனேந்தல் சாலையில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்ட போது, அந்த வழியாகச் சென்ற ஒரு கார் போலீசாரைக் கண்டதும் நிற்காமல் சென்றது.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் வேல்பாண்டியன் தலைமையில் போலீசார் நேற்று இளையரசனேந்தல் சாலையில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்ட போது, அந்த வழியாகச் சென்ற ஒரு கார் போலீசாரைக் கண்டதும் நிற்காமல் சென்றது.

இதனையடுத்து அந்த காரை போலீசார் மடக்கிப் பிடித்து சோதனையிட்டபோது, அதில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பது தெரியவந்தது. விசாரணையில் அவர்கள் கோவில்பட்டி, இளையரசனேந்தல் சாலை, இரட்டை விநாயகர் கோயில், கோபால் தெருவை சேர்ந்த ராஜ்குமார் மகன் மாரிக்கண்ணன் (வயது 24), வள்ளுவர்நகர், 2-வது தெருவைச் சேர்ந்த அய்யாச்சாமி மகன் பாலாஜி(27) என்பது தெரிய வந்தது.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்த ரூ.2 லட்சம் பணம், காரில் இருந்த ரூ.10 ஆயிரம் மதிப்பிலான புகையிலைப் பொருட்கள், விற்பனைக்கு பயன்படுத்தப்பட்ட கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

1 More update

Next Story