கஞ்சா கடத்திய 2 பேர் கைது

தேவாரத்தில் மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்திய 2 பரை போலீசார் கைது செய்தனர்.
கஞ்சா கடத்திய 2 பேர் கைது
Published on

தேவாரத்தில் மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்தி செல்வதாக தேவாரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் தேவாரம் -போடி சாலையில் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் சந்தேகப்படும்படி வந்த 2 பேரை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அவர்கள் 7 கிலோ கஞ்சாவை கடத்தி செல்வது தெரியவந்தது. அதனை போலீசார் பறிமுதல் செய்தனர். விசாரணையில், அவர்கள் தேவாரம், அரண்மனை தெருவை சேர்ந்த ராஜாமணி மகன் பாண்டிசெல்வம் (வயது 36), சர்ச் தெருவை சேர்ந்த கருப்பசாமி மகன் ராஜு (26) என தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com