கஞ்சா கடத்திய 2 பேர் கைது

போளூர் அருகே கஞ்சா கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
கஞ்சா கடத்திய 2 பேர் கைது
Published on

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் மதுவிலக்கு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் புனிதா மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்தின் பேரில் 2 பேரை பிடித்து விசாரணை நடத்தியதில், போளூர் அருகே உள்ள வெள்ளூர் கிராமத்தை சேர்ந்த இளங்கோவன் மகன் அஜித்குமார் (வயது 23) மற்றும் 19 வயது சிறுவன் என்பது தெரியவந்தது.

அவர்களை சோதனை செய்த போது கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து கிலோ கஞ்சா, மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.

X

Daily Thanthi
www.dailythanthi.com