ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது

ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது
Published on

நெல்லை மாவட்ட உணவு பொருள் கடத்தல் தடுப்புபிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கலா, சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் மற்றும் போலீசார் அம்பை ரெயில்வே கேட் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆட்டோவில் ரேஷன் அரிசி கடத்தி வந்த அம்பை பிரம்மதேசத்தை சேர்ந்த ஆறுமுகதுரை (வயது 23) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 400 கிலோ ரேஷன் அரிசி, ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டன.

அதேபோல் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் முல்லைநகரில் நடந்த சோதனையில் மோட்டார் சைக்கிளில் ரேஷன் அரிசி கடத்தி வந்த சங்கரன்கோவில் ரெயில்வே பீடர் ரோட்டை சேர்ந்த மாரியப்பன் (58) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து மோட்டார் சைக்கிள், 120 கிலோ ரேஷன் அரிசி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com