திருநெல்வேலியில் மண் திருட்டில் ஈடுபட்ட 2 பேர் கைது

பழவூர் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் சோபியா தலைமையிலான காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
திருநெல்வேலி
திருநெல்வேலி மாவட்டம், பழவூர் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் சோபியா தலைமையிலான காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தென்காசி மாவட்டம், சொக்கம்பட்டியைச் சேர்ந்த முத்துராஜ் (வயது 43), நாகர்கோவில் மாவட்டம், பார்வதியாபுரத்தை சேர்ந்த முருகேசன்(47) ஆகிய 2 பேரும் வந்த இரண்டு டிப்பர் லாரியையும் போலீசார் சோதனை செய்து பார்த்தனர். அதில் அவர்கள் தலா 4 யூனிட் (கிராவல்) மண்ணை எந்த ஒரு அனுமதியும் இன்றி சட்டவிரோதமாக அள்ளிக் கொண்டு வந்தது தெரிய வந்தது.
இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் சோபியா வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு 2 பேரையும் கைது செய்தார். மேலும் அவர்களிடமிருந்து தலா 4 யூனிட் (கிராவல்) மண் மற்றும் 2 டிப்பர் லாரியையும் பறிமுதல் செய்து உரிய சட்ட நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.
Related Tags :
Next Story






