தூத்துக்குடி: கொலை, பாலியல் தொல்லை வழக்குகளில் 2 பேர் குண்டாசில் கைது

தூத்துக்குடியில் கொலை, பாலியல் தொல்லை வழக்குகளில் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி: கொலை, பாலியல் தொல்லை வழக்குகளில் 2 பேர் குண்டாசில் கைது
Published on

திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டான் பகுதியை சேர்ந்தவர் ஏசய்யா மகன் சுரேஷ் (வயது 47). இவர் தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் பகுதியில் உள்ள விடுதியில் தங்கி இருந்த மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இந்த சம்பவத்தில் சுரேசை கடம்பூர் போலீசார் கைது செய்தனர்.

அதேபோல், தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரம் பகுதியில் நடந்த கொலையில் முள்ளக்காடு பகுதியை சேர்ந்த ஜார்ஜ் மகன் சுரேஷ் (வயது 44) கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், கொலை, பாலியல் தொல்லை ஆகிய 2 வழக்குகளில் கைது செய்யப்பட்ட இருவர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. இருவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. பரிந்துரை அளித்தார். அந்த பரிந்துரைப்படி, இருவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டார். உத்தரவையடுத்து இருவர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்தது. 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com