கொலை வழக்கில் 2 பேர் கைது

நெல்லை அருகே கொலை வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
கொலை வழக்கில் 2 பேர் கைது
Published on

நெல்லை அருகே உள்ள தேவர்குளம் வீரமணிநாயகபுரத்தை சேர்ந்த முத்துபாண்டியன் (வயது 44). இவர் கடந்த 13-ந் தேதி சொந்த வேலையின் காரணமாக வன்னிகோனந்தல் சென்று விட்டு நெல்லை-சங்கரன்கோவில் ரோட்டில் சென்று கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத வாகனம் மீது மோதி காயம் அடைந்த அவர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி கடந்த 19-ந்தேதி இறந்துவிட்டார்.

மேற்படி விபத்து தொடர்பாக முத்துபாண்டியனின், சகோதரி புனிதா (39) என்பவர் தேவர்குளம் போலீசில் புகார் செய்தார். போலீசார் விபத்து வழக்காக பதிவு செய்தனர்.

இந்த விபத்து வழக்கு சம்பந்தமாக சப்-இன்ஸ்பெக்டர் இன்னோஸ்குமார், விசாரணை நடத்தியதில் முத்துபாண்டியனை, தேவர்குளத்தை சேர்ந்த சுப்பிரமணியன் (32), தடியம்பட்டியை சேர்ந்த குருசாமி (26) ஆகியோர் முன்விரோதம் காரணமாக விபத்து ஏற்படுத்தி கொலை செய்தது தெரியவந்தது. பின்னர் விபத்து வழக்கை கொலை வழக்காக மாற்றம் செய்து மானூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சபாபதி, விசாரணை நடத்தி சுப்பிரமணியன், குருசாமி ஆகியோரை கைது செய்தார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com