கொலை முயற்சி, கஞ்சா வழக்கில் 2 பேர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது

தூத்துக்குடியைச் சேர்ந்த வாலிபர் ஒருவர், தூத்துக்குடி சிப்காட் பகுதியில் நடந்த கொலை முயற்சி வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளி ஆவார்.
கொலை முயற்சி, கஞ்சா வழக்கில் 2 பேர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது
Published on

தூத்துக்குடியைச் சேர்ந்த சுந்தரபாண்டி (வயது 21) என்பவர், தூத்துக்குடி சிப்காட் பகுதியில் நடந்த கொலை முயற்சி வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளி ஆவார்.

தூத்துக்குடியைச் சேர்ந்த முருகன்(எ) கட்ட முருகன்(31) என்பவர், தருவைக்குளம் பகுதியில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளி ஆவார்.

மேற்சொன்ன 2 பேர் மீதும் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு சிப்காட் மற்றும் தருவைக்குளம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர்கள், மாவட்ட எஸ்.பி.க்கு வேண்டுகோள் விடுத்தனர்.

அதன்பேரில் தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. மதன் பரிந்துரையின்படி, மாவட்ட கலெக்டர் இளம்பகவத் உத்தரவின்பேரில் மேற்சொன்ன 2 பேரையும் நேற்று முன்தினம் சம்பந்தப்பட்ட போலீசார் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com