கொலை, கொலை முயற்சி வழக்கில் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது

தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை 126 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
கொலை, கொலை முயற்சி வழக்கில் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது
Published on

தூத்துக்குடி ஆரோக்கியபுரம் பகுதியைச் சேர்ந்த பத்மநாதன் மகன் பிரகாஷ் (வயது 21) என்பவர் தூத்துக்குடி தாளமுத்துநகர் பகுதியில் கடந்த 18.10.2025 அன்று நடந்த கொலை முயற்சி வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளி ஆவார். அதேபோன்று ஆறுமுகநேரி பெருமாள்புரம் பகுதியைச் சேர்ந்த இசக்கிபாண்டி மகன் இசக்கிமுத்து(26) என்பவர் கடந்த 14.10.2025 அன்று ஆறுமுகநேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளி ஆவார்.

மேற்சொன்ன 2 குற்றவாளிகளையும் தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் பரிந்துரையின்படி, மாவட்ட கலெக்டர் இளம்பகவத் உத்தரவின் பேரில் இன்று சம்பந்தப்பட்ட காவல் நிலைய போலீசார் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை 126 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

X

Daily Thanthi
www.dailythanthi.com