நெல்லையில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது

நெல்லை டவுண் பகுதியை சேர்ந்த 2 வாலிபர்கள் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் ஈடுபட்டு, பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டனர்.
நெல்லையில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது
Published on

நெல்லை,

திருநெல்வேலி டவுண் பகுதியை சேர்ந்த மாரியப்பன் மகன் இசக்கிமுத்து(எ) கொம்பையா (வயது 23) மற்றும் பரமசிவன் மகன் பாலமுருகன்(19) ஆகிய 2 பேர் நெல்லை மாநகரம் டவுண் பகுதியில் 29.3.2026 அன்று பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் ஈடுபட்டு, பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து திருநெல்வேலி டவுண் குற்றம் (பொறுப்பு) திருநெல்வேலி டவுண் காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டரின் பரிந்துரையின் பேரில் நெல்லை மாநகர போலீஸ் கமிஷனரின் உத்தரவுப்படி நேற்று குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் தடுப்புக்காவலில் அடைக்கப்பட்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com