நெல்லை, அம்பையில் விசாரணை கைதிகளின் பல்லை பிடுங்கிய விவகாரத்தில் 2 காவலர்கள் பணியிட மாற்றம்

விசாரணை கைதிகளின் பல்லை பிடுங்கிய விவகாரத்தில் 2 காவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
நெல்லை, அம்பையில் விசாரணை கைதிகளின் பல்லை பிடுங்கிய விவகாரத்தில் 2 காவலர்கள் பணியிட மாற்றம்
Published on

நெல்லை,

நெல்லை மாவட்டம் அம்பை பகுதியில் உள்ள போலீஸ் நிலையங்களில், போலீசாரால் விசாரணைக்கு அழைத்து செல்லப்படுபவர்களின் பற்களை பிடுங்கி நடவடிக்கை எடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதுதொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் உயர் அதிகாரிகளுக்கு புகார் அளிக்கப்பட்டது. இதில் அம்பை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பல்பீர் சிங் மீது குற்றம் சாட்டப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் உத்தரவிட்டார். இதற்கான விசாரணை அதிகாரியாக சேரன்மாதேவி உதவி கலெக்டர் முகமதுசபீர் ஆலமை நியமிக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.

விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரத்தில் அம்பை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பல்பீர் சிங் பணியிடை நீக்கம் செய்யப்படுவார் என சட்டப்பேரவையில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்ததை தொடர்ந்து அவர் பணிநீக்கம் செய்யப்பட்டார்.

இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக 2 காவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

விக்கிரமசிங்புரம் தனிப்பிரிவு காவலர் போகன் மற்றும் கல்லிடைகுறிச்சி தனிப்பிரிவு காவலர் ராஜ்குமார் ஆகியோரை ஆயுதபடைக்கு மாற்றி மாவட்ட எஸ்.பி. உத்தரவு பிறப்பித்துள்ளார்.  

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com