அண்ணனூரில் மின்சார ஒயர்கள் அறுந்து விழுந்ததில் 2 மாடுகள் பலி

அண்ணனூர் பகுதியில் சேதமடைந்த மின்கம்பங்கள் மற்றும் பழைய மின்சார ஒயர்களை மாற்றியமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை.
அண்ணனூரில் மின்சார ஒயர்கள் அறுந்து விழுந்ததில் 2 மாடுகள் பலி
2 மாடுகள் பலி
Published on: 

ஆவடி,

ஆவடி அடுத்த அண்ணனூர் பகுதியில் அறுந்து விழுந்த மின்சார ஒயர்களை மிதித்ததில் இரண்டு கறவை மாடுகள் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தன.

மின்சாரம் பாய்ந்து பலி

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த அண்ணனூர், பொன்னியம்மன் தெருவில் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் கறவை மாடுகளை வளர்த்து வருகின்றனர். இன்று அப்பகுதியில் மேய்ச்சலுக்காக விடப்பட்டிருந்த இரண்டு கறவை மாடுகள், சாலையில் அறுந்து விழுந்து கிடந்த மின்சார ஒயர்களை எதிர்பாராதவிதமாக மிதித்தன.

இதில் உயர் அழுத்த மின்சாரம் பாய்ந்ததில் அந்த இரண்டு கறவை மாடுகளும் அலறியபடி சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து பரிதாபமாக உயிரிழந்தன.

மக்கள் கோரிக்கை

அண்ணனூர் பகுதியில் பல இடங்களில் மின்கம்பங்கள் மிகவும் சேதமடைந்து, மின்சார ஒயர்கள் தாழ்வாகவும் ஆபத்தான நிலையிலும் தொங்கி கொண்டிருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

எனவே, மனித உயிர்களுக்கு பாதிப்பு ஏற்படும் முன்பு, மின்வாரிய அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து, அண்ணனூர் பகுதியில் சேதமடைந்த மின்கம்பங்கள் மற்றும் பழைய மின்சார ஒயர்களை உடனடியாக மாற்றியமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

X