2 நாள் போலீஸ் காவல்: ‘ஜெம்’ வீரமணியிடம் சிறையில் வைத்து இன்றும் விசாரணை

2 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து 'ஜெம்' வீரமணியிடம் சிறையில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
2 நாள் போலீஸ் காவல்: ‘ஜெம்’ வீரமணியிடம் சிறையில் வைத்து இன்றும் விசாரணை
Published on: 

சென்னை,

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக, தொழிலதிபர் 'ஜெம்' வீரமணி போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் மீதான புகாரை சிறப்பு புலனாய்வு குழு விசாரித்து வருகிறது.

7 வழக்குகள் பதிவு

இதுவரை வீரமணி மீது 10 சிறுமிகள் புகார் கொடுத்துள்ளனர். அதுதொடர்பாக அவர் மீது 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றில் 4 வழக்குகளில் அவர் கைதாகியுள்ளார். குண்டர் சட்டமும் அவர் மீது பாய்ந்துள்ளது. ஏற்கனவே 3 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து 'ஜெம்' வீரமணியிடம் சிறையில் வைத்து போலீசார் விசாரித்தார்கள்.

இந்த நிலையில் மேலும் 2 நாட்கள் அவரிடம் போலீஸ் காவலில் விசாரணை நடத்த, கோர்ட்டு அனுமதி வழங்கியது. அதன்படி, நேற்று காலையில் இருந்து மாலை வரை வீரமணியிடம் சிறப்பு புலனாய்வு குழு போலீசார் சிறையில் வைத்து விசாரித்தனர்.

இன்றும் விசாரணை

உதவி கமிஷனர் காயத்ரி தலைமையிலான போலீசார், வீரமணியிடம் அடுக்கடுக்கான கேள்விகள் கேட்டு அவரின் வாக்குமூலத்தை பதிவு செய்தனர். அவரிடம் இன்றும் (சனிக்கிழமை) சிறையில் வைத்து போலீசார் விசாரணை நடத்த உள்ளனர். அவரது வயதை கருத்தில்கொண்டு. கோர்ட்டு அனுமதியுடன் சிறையில் வைத்து அவரிடம் விசாரணை நடக்கிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com