தமிழ்நாடு, புதுச்சேரி கடலோர பகுதிகளில் 2 நாட்கள் நடைபெற்ற பாதுகாப்பு பயிற்சி


தமிழ்நாடு, புதுச்சேரி கடலோர பகுதிகளில் 2 நாட்கள் நடைபெற்ற பாதுகாப்பு பயிற்சி
x

பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டவர்கள் ‘ரெட் போர்ஸ்’ மற்றும் ‘புளூ போர்ஸ்’ என இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டனர்.

சென்னை,

'சாகர் கவச் (தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி) 01/2025'எனும் கடலோர பாதுகாப்புப் பயிற்சி, இந்திய கடலோர காவல் படையினால், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடலோர பகுதிகளில் பயங்கரவாத தாக்குதல்களுக்கு எதிராக பாதுகாப்புப் படைகள் மற்றும் உளவு அமைப்புகளின் தயார்திறனை மற்றும் செயல்திறனை மதிப்பீடு செய்யும் நோக்கில் 25.06.2025 மற்றும் 26.06.2025 ஆகிய தேதிகளில் நடத்தப்பட்டது.

இந்த பயிற்சியில், தமிழ்நாடு காவல் துறையின் கடலோர பாதுகாப்பு பிரிவு, இந்திய கடற்படை, இந்திய கடலோர காவல் படை, மத்திய தொழிற்சாலை பாதுகாப்புப் படை (CISF), தேசிய பாதுகாப்புப் படை (NSG), மீன்வளத்துறை(Lighthouse Authorities), உளவுத்துறைகள், கடல் வாணிபத் துறை, குடிவரவு, சுங்கத் துறை, வனத்துறை, ONGCமற்றும் அனைத்து முக்கியமான மற்றும் சிறிய துறைமுகங்களும் பங்கேற்றன. தமிழ்நாடு முழு கடலோரப் பகுதியில் இந்த பயிற்சி வெற்றிகரமாக நடைபெற, இத்தனை அமைப்புகளில் இருந்து சுமார் 10,000 பேர், அதில் தமிழ்நாடு காவல்துறையில் இருந்து மட்டும் 9,226 போலீசாரும் ஈடுபட்டனர்.

பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டவர்கள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டனர். 'ரெட் போர்ஸ்' (Red Force) எனும் குழுவினர் கடல் வழியாக நாடு புகுந்து முக்கிய சொத்துகள் மற்றும் அபாயமான இடங்கள், மற்றும் கடலோர மக்கள் கூடும் சுற்றுலா பகுதிகளை நோக்கி நுழைய திட்டமிட்டனர். மற்றொரு குழு 'புளூ போர்ஸ்' (Blue Force) கடலில் மற்றும் நிலத்தில் அவர்களை தடுக்க வேண்டிய பணியில் ஈடுபட்டனர்.

இந்திய கடலோர காவல்படை, இந்திய கடற்படை மற்றும் சுங்கத்துறைகப்பல்கள், பறக்கும் விமானங்கள், வேகமான துரிதப்படகுகள், ஹெலிகாப்டர்கள் மற்றும் ஹோவர்கிராப்ட் ஆகியவற்றை நியமித்தன. கடலோர பாதுகாப்பு பிரிவு, திருவள்ளூர் முதல் கன்னியாகுமரி வரையிலான தமிழ்நாடு கடலோரத்தில் 19 வேகதுரித படகுகள் மற்றும் 7 வாடகை படகுகளை இயக்கியது.

மொத்தத்தில், இந்த பயிற்சி எதிர்பார்க்கப்பட்ட இலக்கை அடைந்தது. மாநிலம் முழுவதும் 35 இடங்களில் ஊடுருவும் முயற்சிகள் செய்தபோது, அவை அனைத்தும் தடுக்கப்பட்டு 132 ஊடுருவிகள் மற்றும் (Red Force) 'ரெட் போர்ஸ்' பயன்படுத்திய 8 படகுகள் பிடிக்கபட்டன.

மேலும் 26.06.2025 அன்றுகடல் கடத்தல் சூழ்நிலை உருவாக்கும் பயிற்சி நடத்தப்பட்டது. இதில், காலை 7.00 மணியளவில், காமராஜர் துறைமுக எல்லையில் 'M.V. RIPLEY PRIDE' எனும் வாணிபக் கப்பலை 'ரெட் போர்ஸ் '(Red Force) குழுவைச் சேர்ந்த மூன்று பயங்கரவாதிகள் கப்பலில் நுழைந்து, கப்பல் மாஸ்டர் உட்பட 23 பணியாளர்களைபிடித்து பணயகைதிகளாக பிடித்துகொண்டனர்.

இதையொட்டி, சஞ்சய் குமார் IPS, கூடுதல் காவல் துறை இயக்குநர், கடலோர பாதுகாப்புப் குழுமம் மற்றும் தமிழ்நாடு மாநில கடல் பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளரின் தலைமையில், எண்ணூர் காமராஜர் துறைமுகத்திலுள்ள சிக்னல் நிலையத்தில் 'விபத்து மேலாண்மை குழு' அமைக்கப்பட்டது. மாநில காவல்துறை தலைமை இயக்குநர் மற்றும் உயர் அரசு அதிகாரிகளின் வழிகாட்டலின் கீழ், மாநில கடலோர பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர் இச்சூழ்நிலையை கண்காணித்து, பிற அமைப்புகளை வழிநடத்தினார்.

பேச்சுவார்த்தை முயற்சி தோல்வியடைந்ததால், காலை 10:12 மணி முதல் 11:50 மணி வரை (storming) நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இதில் NSG Hub சென்னையிலிருந்து 40 NSG கமாண்டோக்கள் கொண்ட 27 NSG குழு, இந்திய கடலோர காவல் படையின் கப்பலிலும், துறைமுகத்தின் TUG படகிலும், கடலோர பாதுகாப்பு குழுவின் விரைவு பதிலளிப்புப் பிரிவு மற்றும் CISF உடன் இணைந்து, மாநில அரசின் ஒப்புதலுடன் பங்கேற்றனர்.

இந்த நடவடிக்கையில், 3 பயங்கரவாதிகள் செயல் இழக்கப்பட்டும் ஒருவர் கைது செய்யப்பட்டும் ஆவடி காவல் ஆணையரக போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். மேலும், கடத்தப்பட்ட 23 பணியாளர்களும் காயமின்றி மீட்கப்பட்டனர். இக்கப்பல் பின்னர் காமராஜர் துறைமுக அதிகாரிகளால் வெளியிறக்கத்தில் (outer anchorage) தடுத்து வைக்கப்பட்டது. கடல் கடத்தல் சூழ்நிலை வெற்றிகரமாக முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. இப்பயிற்சி, அவசரநிலை ஏற்படும் நேரத்தில் தயார்திறன் மற்றும் பல்வேறு அமைப்புகளின் ஒருங்கிணைப்புத் திறனை நிலைநாட்டும் வகையில் வெற்றிகரமாக நிறைவு பெற்றது.

1 More update

Next Story