சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு மதுபான கடைகளுக்கு 2 நாட்கள் விடுமுறை

சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு மதுபான கடைகளுக்கு 2 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு மதுபான கடைகளுக்கு 2 நாட்கள் விடுமுறை
Published on

சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு மதுபான கடைகளுக்கு 2 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெறும் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு நாளை (4-ந் தேதி) மற்றும் நாளை மறுநாள் (5-ந் தேதி) ஆகிய 2 நாட்கள் திருவண்ணாமலை நகரத்திற்கு அருகாமையில் இயங்கி வரும் மதுபானக்கடைகள் மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி காமராஜர் சிலை அருகில் உள்ள மதுபான கடை, வேங்கிக்கால் ஏரிக்கரையில் உள்ள மதுபான கடை, வேங்கிக்கால் புறவழிச்சாலை உள்ள மதுபானக்கடை, நல்லவன்பாளையத்தில் உள்ள மதுபான கடைகள் மற்றும் திருவண்ணாமலை நகரில் தனியார் ஓட்டல்களில் இயங்கி வரும் மதுபான கூடங்கள், முன்னாள் ராணுவ வீரர்களுக்கான அங்காடி ஆகியவற்றிற்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது என கலெக்டர் முருகேஷ் தெரிவித்து உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com