அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லூர் பகுதிகளில் 2 நாள் தண்ணீர் வினியோகம் நிறுத்தம்

சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லூர் பகுதிகளில் 2 நாள் தண்ணீர் வினியோகம் நிறுத்தம்
Published on

வேளச்சேரி-தாம்பரம் சாலையில் (தேசிய காற்று சக்தி நிறுவனம் எதிரில்) மடிப்பாக்கம் விரிவான குடிநீர் வழங்கல் திட்டத்திற்கான இணைப்புப் பணி,வேளச்சேரி-தாம்பரம் பிரதான சாலை மற்றும் மேடவாக்கம் பிரதான சாலை சந்திப்பில் நெம்மேலியில் உள்ள 150 எம்.எல்.டி. கடல்நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து குடிநீர் கொண்டுசெல்லும் 1200 மி.மீ. விட்டமுள்ள குடிநீர்க்குழாயுடன் 110 எம்.எல்.டி. கடல்நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து குடிநீர் கொண்டுசெல்லும் 800 மி.மீ. விட்டமுள்ள குடிநீர்க் குழாயினை இணைக்கும் பணி மற்றும் வெட்டுவான்கேணி தேவாலயத்திற்கு எதிரில் ஒக்கியம்-துரைப்பாக்கம் விரிவான குடிநீர் வழங்கல் திட்டத்திற்கான இணைப்புப்பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால் நெம்மேலியில் உள்ள 110 எம்.எல்.டி. உற்பத்தித்திறன் கொண்ட கடல்நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து குடிநீர் வினியோகம் நிறுத்தம் செய்யப்படவுள்ளது. எனவே, பகுதி-13, 14 மற்றும் பகுதி-15 ஆகிய பகுதிகளுக்குட்பட்ட அடையாறு, தரமணி, கோட்டூர் கார்டன், ஆர்.கே.மடம் தெரு, வேளச்சேரி, இந்திரா நகர், பெருங்குடி, கொட்டிவாக்கம், பாலவாக்கம், பள்ளிக்கரணை, மடிப்பாக்கம், புழுதிவாக்கம், சோழிங்கநல்லூர், ஈஞ்சம்பாக்கம், நீலாங்கரை, அக்கரை, வெட்டுவான்கேணி, செம்மஞ்சேரி, ஒக்கியம் - துரைப்பாக்கம் ஆகிய இடங்களில் 25-2-2023 அன்று (நாளை) காலை 6 மணி முதல் 26-2-2023 அன்று (நாளை மறுநாள்) காலை 6 மணி வரை குழாய்கள் மூலம் வழங்கும் குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

எனவே, பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக, வேண்டிய அளவு குடிநீரை சேமித்து வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அவசரத் தேவைகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் பெற்றுக்கொள்ள வாரியத்தின் https://chennaimetrowater.tn.gov.in/ என்ற இணையதள முகவரியினை பயன்படுத்தி பதிவுசெய்து பெற்றுக்கொள்ளலாம். மேலும், குடிநீர் இணைப்பு இல்லாத பகுதிகள் மற்றும் அழுத்தம் குறைவான பகுதிகளுக்கு குடிநீர் தொட்டிகள் மற்றும் தெரு நடைகளுக்கு லாரிகள் மூலம் வழங்கப்படும் குடிநீர் வினியோகம் எந்தவிதத்தடையுமின்றி வழக்கம்போல் சீரான முறையில் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com