2 பேர் பரிதாப சாவு

மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்ட விபத்தில் 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.
2 பேர் பரிதாப சாவு
Published on

மொரப்பூர்:-

மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்ட விபத்தில் 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.

மோட்டார் சைக்கிள்கள் மோதல்

கம்பைநல்லூர் அருகே நடந்த இந்த விபத்து பற்றிய விவரம் வருமாறு:-

தர்மபுரி மாவட்டம் கம்பைநல்லூர் அருகே சவூலூர் பகுதியைச் சேர்ந்த வேடியப்பன் மகன் சின்னச்சாமி (வயது 60). இவர் நேற்று முன்தினம் சவூலூரில் இருந்து கம்பைநல்லூர் நோக்கி தன்னுடைய மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது பாலகிருஷ்ணன் (50) என்பவரும், அவருடைய உறவினர் மூக்கன் என்பவரும் இன்னொரு மோட்டார் சைக்கிளில் ஆல்ரப்பட்டி அருகே வந்து கொண்டிருந்தனர்.

2 பேர் சாவு

சின்னச்சாமி வந்த மோட்டார் சைக்கிளும், பாலகிருஷ்ணன் வந்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் மோட்டார் சைக்கிள்களில் இருந்து 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். சின்னச்சாமி, மூக்கன், பாலகிருஷ்ணன் ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர்.

அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் 3 பேரையும் மீட்டு தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் மூக்கன், சின்னச்சாமி இருவரும் பரிதாபமாக இறந்தனர். பாலகிருஷ்ணனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கம்பைநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com