புதுவையில் கொரோனாவுக்கு 2 முதியவர்கள் பலி

கொரோனாவுக்கு 2 முதியவர்கள் பலியாகி உள்ளனர்.
புதுவையில் கொரோனாவுக்கு 2 முதியவர்கள் பலி
Published on

புதுச்சேரி

கொரோனாவுக்கு 2 முதியவர்கள் பலியாகி உள்ளனர்.

198 பேருக்கு தொற்று

புதுவையில் இன்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் 2 ஆயிரத்து 322 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 198 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியானது. தற்போது ஆஸ்பத்திரிகளில் 74 பேர், வீடுகளில் 3 ஆயிரத்து 12 பேர் என 3 ஆயிரத்து 86 பேர் தனிமைப்படுத்தப்பட்டு தொடர் சிகிச்சையில் உள்ளனர். 538 பேர் குணமடைந்தனர்.

2 முதியவர்கள் பலி

இருந்தபோதிலும் 2 முதியவர்கள் பலியாகி உள்ளனர். அதாவது ஜிப்மரில் லாஸ்பேட்டை சாந்தி நகரை சேர்ந்த 81 வயது முதியவர், மாகியில் 85 வயது மூதாட்டி ஆகியோர் பலியாகி உள்ளனர். இதனால் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 1,955 ஆக உயர்ந்துள்ளது.

புதுவையில் தொற்று பரவல் 8.53 சதவீதமாகவும், குணமடைவது 96.94 சதவீதமாகவும் உள்ளது. நேற்று முன்தினம் முதல் தவணை தடுப்பூசியை 517 பேரும், 2-வது தவணை தடுப்பூசியை 1,220 பேரும், பூஸ்டர் தடுப்பூசியை 283 பேரும் செலுத்திக்கொண்டனர். இதுவரை 15 லட்சத்து 50 ஆயிரத்து 93 டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com