2 கிலோ, 5 கிலோ கேஸ் சிலிண்டர்கள் இன்று அறிமுகம்

2 கிலோ மற்றும் 5 கிலோ கேஸ் சிலிண்டர்களை கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி இன்று அறிமுகப்படுத்தவுள்ளார்.
2 கிலோ, 5 கிலோ கேஸ் சிலிண்டர்கள் இன்று அறிமுகம்
Published on

சென்னை,

இரண்டு கிலோ மற்றும் ஐந்து கிலோ கேஸ் சிலிண்டர்களை கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி இன்று அறிமுகப்படுத்தவுள்ளார். இடம் பெயரும் தொழிலாளர்கள், நடைபாதை வியாபாரிகள், சிறு வணிகர்கள் உள்ளிட்டோருக்கு பயனளிக்கு வகையில், இந்தியன் ஆயில் நிறுவனத்தின் இரண்டு கிலோ மற்றும் ஐந்து கிலோ கேஸ் சிலிண்டர்கள் விற்பனைக்கு வருகிறது.

2 கிலோ கேஸ் சிலிண்டருக்கு 'முன்னா' எனவும், ஐந்து கிலோ கேஸ் சிலிண்டருக்கு 'சோட்டு' எனவும் பெயரிடப்பட்டுள்ள நிலையில், இந்த கேஸ் சிலிண்டர்களை கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ பெரியசாமி இன்று அறிமுகப்படுத்தவுள்ளார்.

முதற்கட்டமாக திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கத்தின் ஐந்து சுயசேவைப் பிரிவுகள் மூலம் இந்த கேஸ் சிலிண்டர்கள் விற்பனை செய்யப்படவுள்ளது. இந்த கேஸ் சிலிண்டர்களை பெற இருப்பிடச் சான்று, முன்பணம் தேவையில்லை, ஏதாவது ஒரு அடையாள அட்டையை சமர்ப்பித்தால் போதும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com