2 கிலோ கஞ்சா பறிமுதல்: ஒடிசா மாநில வாலிபர் கைது

திருநெல்வேலி மாவட்டம், முக்கூடல் பகுதியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கரநாராயணன் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
2 கிலோ கஞ்சா பறிமுதல்: ஒடிசா மாநில வாலிபர் கைது
Published on

திருநெல்வேலி மாவட்டம், முக்கூடல் பகுதியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கரநாராயணன் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், வடக்கு அரியநாயகிபுரம் ஆற்றங்கரை அருகே சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஹேமந்த் மர்ஜி (வயது 28) என்பவரை பிடித்து போலீசார் சோதனை செய்தனர்.

அப்போது அவர் அரசால் தடை செய்யப்பட்ட மனித உயிருக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய 2 கிலோ கஞ்சாவை விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து முக்கூடல் காவல் நிலையத்தில் NDPS (Narcotic Drugs and Psychotropic Substances Act) சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு போலீசார், ஹேமந்த் மர்ஜித்தை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் அவரிடமிருந்து 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com