ரசாயனம் ஏற்றி சென்ற லாரி மோதி 2 பேர் உயிரிழப்பு


ரசாயனம் ஏற்றி சென்ற லாரி மோதி 2 பேர் உயிரிழப்பு
x
தினத்தந்தி 7 Jun 2025 11:37 AM IST (Updated: 7 Jun 2025 1:02 PM IST)
t-max-icont-min-icon

லாரியில் இருந்து ரசாயனம் வெளியேறி வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

செங்கல்பட்டு,

செங்கல்பட்டு மாவட்டம் அருகே ரசாயனம் (ஆசிட்) ஏற்றிகொண்டு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. கல்பாக்கம் அருகே சென்றுகொண்டிருதபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரி சாலையில் கவிழ்ந்தது. மேலும் லாரியில் இருந்து ரசாயனம் வெளியேறியது.

இந்த விபத்தில் மிதிவண்டியில் வந்த வாயலூர் பகுதியைச் சேர்ந்த துரை மற்றும் வெளியூரை சேர்ந்த அடையாளம் தெரியாத நபர் என இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். லாரியில் இருந்து ரசாயனம் வெளியேறி வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். மேலும் லாரியை ஓட்டி வந்த டிரைவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் லாரியில் இருந்து வெளியேறி வரும் ரசாயனத்தை தடுக்க தீவிர முயற்சி மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது பரபரப்பை ஏற்படுத்தியது.

1 More update

Next Story