மேலும் 2 பேர் கைது

பழனியில் நடந்த தொழிலாளி கொலை வழக்கில், மேலும் 2 போ கைது செய்யப்பட்டனர்.
மேலும் 2 பேர் கைது
Published on

பழனி குரும்பபட்டியை சேர்ந்தவர் வடிவேல் (வயது 27). கூலித்தொழிலாளி. கடந்த 3-ந்தேதி இவர், பழனி பஸ்நிலையம் அருகே நடந்து வந்தபோது வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதுகுறித்து பழனி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், முன்விரோதத்தில் வடிவேலுவின் நண்பர்களான அழகாபுரியை சேர்ந்த சுரேஷ், பழனி அடிவாரத்தை சேர்ந்த வி.மாரிமுத்து ஆகியோர் வடிவேலுவை கொலை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து அவர்கள் 2 பேரும் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் கொலைக்கு உடந்தையாக இருந்ததாக பழனி அடிவாரத்தை சேர்ந்த செல்லப்பாண்டி (25), பி.மாரிமுத்து (24) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com