கிருஷ்ணகிரி ஆணவக்கொலை வழக்கில் மேலும் 2 பேர் கோர்ட்டில் சரண்

கிருஷ்ணகிரி ஆணவக்கொலை வழக்கு தொடர்பாக மேலும் 2 பேர் கோர்ட்டில் சரணடைந்துள்ளனர்.
கிருஷ்ணகிரி ஆணவக்கொலை வழக்கில் மேலும் 2 பேர் கோர்ட்டில் சரண்
Published on

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி அருகே ஜெகன் இளைஞர் ஒருவர், ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ள நிலையில், பெண்வீட்டாரின் எதிர்ப்பை மீறி அப்பெண்ணை திருமணம் செய்துகொண்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், அந்த இளைஞர் கே.ஆர்.பி. அணை அருகே இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது, பெண்ணின் உறவினர்கள் நடுரோட்டில் துடிக்க துடிக்க ஜெகனின் கழுத்தை அறுத்து படுகொலை செய்துள்ளனர். இதையடுத்து அவர்கள் சம்பவ இடத்தில் இருந்து தப்பிச்சென்னர்.

இந்த சூழலில், இளைஞர் ஆணவக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கொலையாளி சங்கர் நீதிமன்றத்தில் சரணடைந்து உள்ளார்.

அப்போது அவர், காதல் திருமணம் செய்து கொண்ட தனது மகளின் கணவரை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார். மகளின் காதல் திருமணத்தால் விரக்தியில் கொலை செய்ததாக நீதிமன்றத்தில் அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்திவரும் நிலையில், முரளி, நாகராஜ் ஆகிய இருவர் கொலை தொடர்பாக கோர்ட்டில் சேலம் குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர்.  

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com