அரக்கோணத்தில் இருந்து திருவள்ளூருக்கு விரைந்த 2 தேசிய பேரிடர் மீட்புக்குழு


அரக்கோணத்தில் இருந்து திருவள்ளூருக்கு விரைந்த 2 தேசிய பேரிடர் மீட்புக்குழு
x

ரெயில்வே டிராக்கில் உள்ள அனைத்து மின்கம்பங்களில் உள்ள மின்சார வயர்கள் சேதமடைந்து உள்ளன.

சென்னை,

திருவள்ளூர் ரெயில் நிலையம் அருகே 52 வேகன்களில் எரிபொருள் ஏற்றிச் சென்ற சரக்கு ரெயிலில் பயங்கரத் தீ விபத்து ஏற்பட்டது. சென்னையில் இருந்து மைசூருக்கு பெட்ரோலியப் பொருட்களை ஏற்றிச் சென்றபோது விபத்து ஏற்பட்டுள்ளது. ரெயில் தடம் புரண்டதால் தீ விபத்து நேரிட்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. தீ விபத்தால் -சென்னை - அரக்கோணம் வழித்தடத்தில் இரு மார்க்கத்திலும் ரெயில்கள் நிறுத்தப்பட்டுள்ளது. விபத்து ஏற்பட்ட பகுதியில் அருகில் உள்ள குடியிருப்புகளில் சமையல் கேஸ் சிலிண்டர்களை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டதன் பேரில் அரக்கோணத்தில் இருந்து திருவள்ளூருக்கு 2 தேசிய பேரிடர் மீட்புக்குழு விரைந்துள்ளது. ஆய்வாளர் கோபி தலைமையில் 60 பேர் கொண்ட 2 குழுக்கள் விபத்துக்குள்ளான பகுதிக்கு விரைந்துள்ளன. தீ பற்றி எரிந்த டீசல் டேங்கால் சுமார் 200 மீட்டர் அளவிற்கு தண்டவாளம் முற்றிலும் சேதம் அடைந்துள்ளது.

ரெயில்வே டிராக்கில் உள்ள அனைத்து மின்கம்பங்களில் உள்ள மின்சார வயர்கள் சேதமடைந்து உள்ளன. மின்கம்பிகளை சீரமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். பயணிகள் 044 - 25354151 | 044 - 24354995 என்ற உதவி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

1 More update

Next Story