முதியவரை தாக்கிய 2 பேர் கைது

முதியவரை தாக்கிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
முதியவரை தாக்கிய 2 பேர் கைது
Published on

நெல்லை தச்சநல்லூர் அருகே உள்ள கீழக்கரை பகுதியை சேர்ந்தவர் மனோ (வயது 21). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த கண்ணன் மகன் ராஜா (21) ஆகியோருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் ராஜா தனது உறவினர்களான அழகனேரியை சேர்ந்த சங்கர் உள்ளிட்ட சிலரை வரவழைத்து மனோவுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனை பார்த்த அப்பகுதியை சேர்ந்த ஆறுமுகம் (60) என்பவர் அவர்களை சமரசம் செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ராஜா உள்ளிட்டவர்கள் ஆறுமுகத்தை கட்டையால் தாக்கியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்த புகாரின் பேரில் தச்சநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து இசக்கிராஜா (21), உச்சிமாகாளி (20) ஆகிய 2 பேரை கைது செய்தனர். மற்றவர்களை தேடி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com