கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது

பாளையங்கோட்டை பகுதியில் கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது
Published on

பாளையங்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பழனி முருகன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது இளங்கோநகர் சந்திப்பு பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்றுகொண்டு இருந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் நெல்லை சந்திப்பு சிந்துபூந்துறையை சேர்ந்த மாரிமுத்து மகன் பாஸ்கர் (வயது 23) மற்றும் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் என்பதும், அவர்கள் கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1 கிலோ 200 கிராம் கஞ்சா மற்றும் ரூ.420 பறிமுதல் செய்யப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com