புகையிலை பொருட்கள் வைத்திருந்த 2 பேர் கைது

சேரன்மாதேவியில் புகையிலை பொருட்கள் வைத்திருந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
புகையிலை பொருட்கள் வைத்திருந்த 2 பேர் கைது
Published on

சேரன்மாதேவி:

சேரன்மாதேவி பகுதியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கணேசன் தலைமையில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது ஆர்.சி. பள்ளி அருகே சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த பத்தமடை பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த அல்லா பிச்சை (வயது 45), மீரான் (48) ஆகிய இருவரை சோதனை செய்தபோது அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்வதற்காக வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து, 1 கிலோ 250 கிராம் புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com