கத்திமுனையில் செல்போன் பறித்த 2 பேர் கைது

மறைமலைநகரில் கத்திமுனையில் செல்போன் பறித்த 2 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
கத்திமுனையில் செல்போன் பறித்த 2 பேர் கைது
Published on

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் நகராட்சிக்கு உட்பட்ட கூடலூர் கங்கை அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பற்குணம் (வயது 42). இவர் மறைமலைநகர் தொழிற்சாலை பகுதிகளில் உள்ள சாலையோர டிபன் கடையில் நேற்று முன்தினம் சாப்பிட்டு கொண்டிருந்தார். அப்போது அங்கு சாப்பிட்டுக் கொண்டிருந்த 2 பேர் தங்களுக்கும் சேர்த்து பணம் தரும்படி பற்குணத்தை மிரட்டி உள்ளனர். பற்குணம் பணம் தர மறுத்ததால் அவர்கள் இருவரும் கத்திமுனையில் மிரட்டி பற்குணம் வைத்திருந்த செல்போனை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

இதுகுறித்து மறைமலைநகர் போலீசில் பற்குணம் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து சென்னை ஆதம்பாக்கம் பகுதியை சேர்ந்த கார்த்திக் (வயது25), பெங்களூரு பகுதியை சேர்ந்த அர்ஜுனன் (23) ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com