பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற 2 பேர் கைது

பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற 2 பேர் கைது
Published on

அருப்புக்கோட்டை அருகே கோபாலபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்புலட்சுமி (வயது 59). இவர் அங்குள்ள அரசு மாணவியர் விடுதியில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவர் திருச்சுழி அருகே உள்ள எம்.ரெட்டியபட்டி புதூரில் புதிதாக வீடு கட்டி வருகிறார். புதிதாக கட்டி வரும் வீட்டை பார்ப்பதற்காக சுப்புலட்சுமி ஒத்தக்கடையிலிந்து சிலுக்கப்பட்டி செல்லும் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு மர்ம நபர்களில் ஒருவர் மட்டும் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே இறங்கி சுப்புலட்சுமி கழுத்தில் கிடந்த 6 பவுன் செயினை பறிக்க முயன்றார். அப்போது சுப்புலட்சுமி சத்தம் போட்டதால் அருகில் இருந்தவர்கள் வரவும் செயினை பறிக்க முயன்றவர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இதில் சுப்புலட்சுமி கீழே விழுந்ததில் காயம் ஏற்பட்டது. இதுகுறித்து சுப்புலட்சுமி எம். ரெட்டியபட்டி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் நகையை பறிக்க முயன்றவர்களை வலைவீசி தேடி வந்தனர். அந்த பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் ராமநாதபுரம் மாவட்டம் ரெட்டையூரணியை சேர்ந்த யுவஸ்ரீதர் (23) உள்பட 2 பேரை கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com