

திருநெல்வேலி மாவட்டம் மானூர் பகுதியில் கொலை ஆகாத மரணம் விளைவிக்கின்ற குற்றம் முயற்சி மற்றும் மிரட்டல் வழக்கில் ஈடுபட்ட மானூரைச் சேர்ந்த சுடலைமுத்து மகன் உதயராஜ் (வயது 19) கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இவர் மீது தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மானூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் அருண்குமார் மாவட்ட எஸ்.பி.யிடம் வேண்டுகோள் விடுத்தார்.
அதேபோல் திருநெல்வேலி மாவட்டம், நரசிங்கநல்லூர், ஜீவாநகரை சேர்ந்த சேகர் மகன் மாரியப்பன்(20) போக்சோ வழக்கு குற்றவாளி ஆவார். இவர் மீது தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க சேரன்மகாதேவி அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி மாவட்ட எஸ்.பி.யிடம் வேண்டுகோள் விடுத்தார்.
மேற்சொன்ன காவல் நிலைய இன்ஸ்பெக்டர்களின் வேண்டுகோள்படி, திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. பிரசண்ணகுமார் பரிந்துரைப்படி, மாவட்ட கலெக்டர் சுகுமார் உத்தரவுப்படி இன்று, மேற்சொன்ன 2 பேரும் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.