குண்டர் தடுப்பு சட்டத்தில் 2 பேர் கைது

குண்டர் தடுப்பு சட்டத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
குண்டர் தடுப்பு சட்டத்தில் 2 பேர் கைது
Published on

ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் தொடர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்த வேலூர் சலவன்பேட்டை பகுதியைச் சேர்ந்த சசி என்கிற சசிகுமார் (வயது 46), திருவள்ளூர் மாவட்டம் மதுரவாயல் சின்னநோம்பூர் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் என்கிற மாடு ரமேஷ் (51) ஆகிய இருவரையும் திமிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி கைதுசெய்து சிறையில் அடைத்தனர். மேலும் இவர்களின் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் பொருட்டு, ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண் சுருதி பரிந்துரையின் பேரில் அவர்கள் இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைதுசெய்ய மாவட்ட கலெக்டர் வளர்மதி உத்தரவிட்டார். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com