கட்டிட மேஸ்திரி உள்பட 2 பேர் தற்கொலை

அரூர்-கடத்தூரில் கட்டிட மேஸ்திரி உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
கட்டிட மேஸ்திரி உள்பட 2 பேர் தற்கொலை
Published on

அரூர்

தர்மபுரி மாவட்டம் அரூர் மேட்டு தெருவை சேர்ந்தவர் மாது ( 45). கட்டிட மேஸ்திரி. இவர் நேற்று முன்தினம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாது தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடத்தூர் அருகே உள்ள காவேரிபுரத்தை சேர்ந்தவா கோவிந்தம்மாள் (65). இவர் நேற்று விஷம் குடித்து விட்டு வீட்டில் மயங்கி கிடந்தார். அவரை குடும்பத்தினர் மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். டாக்டர்கள் பரிசோதித்த போது மூதாட்டி ஏற்கனவே இறந்து விட்டது தெரிந்தது. இதுகுறித்து கடத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com