2 பேர் தூக்குப்போட்டு தற்கொலை

வெவ்வேறு சம்பவங்களில் 2 பேர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
2 பேர் தூக்குப்போட்டு தற்கொலை
Published on

நெல்லை தச்சநல்லூர் மேலஊருடையார்புரம் தெற்கு தெருவை சேர்ந்தவர் மணி. இவரின் மகன் வேல்முருகன் (வயது 47). கட்டிட தொழிலாளி. இவர் குடும்ப பிரச்சினை காரணமாக மனைவி, குழந்தைகளைப் பிரிந்து வாழ்ந்து வந்தார். இதனால் மனமுடைந்து காணப்பட்ட அவர் நேற்று முன்தினம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து தச்சநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நெல்லை முன்னீர்பள்ளம் அருகே உள்ள தருவை காந்திநகரை சேர்ந்தவர் அந்தோணி. இவரின் மகன் முத்துஇசக்கி (வயது 19). தொழிலாளி. இவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டாராம். சம்பவத்தன்று கணவன், மனைவி பிரச்சினையில் மனமுடைந்த முத்துஇசக்கி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாராம். இதுகுறித்து முன்னீர்பள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com