பள்ளி மாணவி உள்பட 2 பேர் சாவு

பள்ளி மாணவி உள்பட 2 பேர் இறந்தனர்.
பள்ளி மாணவி உள்பட 2 பேர் சாவு
Published on

திருச்சி கல்லுக்குழி பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 40). இவருடைய மகள் நந்தினி (15). இவர் மன்னார்புரம் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் மதியம் பள்ளியில் இருந்த நந்தினி திடீரென ரத்த வாந்தி எடுத்து மயங்கி விழுந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் கே.கே.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், மாணவி நந்தினி காசநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததும், இதனால் அவர் இறந்ததும் தெரியவந்தது.

இதேபோல் முசிறி ஆலமரத்துப்பட்டியை சேர்ந்தவர் கருப்பண்ணன் (58). இவர் சம்பவத்தன்று பக்கத்தில் உள்ள டீக்கடைக்கு சென்று டீ குடித்துவிட்டு, சாலையை கடந்தபோது, திடீரென்று மயங்கி விழுந்து இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் முசிறி போலீசார் வழக்குப்பதிவு செய்த விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com