பெண்ணை அவதூறாக பேசிய 2 பேருக்கு அபராதம்

நெல்லை அருகே பெண்ணை அவதூறாக பேசிய 2 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
பெண்ணை அவதூறாக பேசிய 2 பேருக்கு அபராதம்
Published on

பாளையங்கோட்டை கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் ராணி. இவருக்கும், பக்கத்து வீட்டை சேர்ந்த முருகேசன் என்பவருக்கும் தெரு குழாயில் தண்ணீர் பிடிப்பதில் முன்விரோதம் இருந்துள்ளது. இந்த நிலையில் ராணியை கடந்த 2016-ம் ஆண்டு முருகேசன், சாமுவேல், சேர்மபாண்டியன் ஆகியோர் சேர்ந்து அவதூறாக பேசி மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு நெல்லை மகளிர் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி விஜயகுமார், குற்றம் சாட்டப்பட்ட முருகேசன், சாமுவேல் ஆகியோருக்கு தலா ரூ.13 ஆயிரம் வீதம் ரூ.26 ஆயிரம் அபராதம் விதித்தார். அதில் ரூ.13 ஆயிரம் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு வழங்க உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் ஜெயபிரபா ஆஜரானார். வழக்கு நடந்து வந்த காலக்கட்டத்தில் சேர்மபாண்டியன் இறந்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com