மது விற்ற 2 பேர் கைது

மது விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
மது விற்ற 2 பேர் கைது
Published on

நெல்லை சந்திப்பு போலீசார் நேற்று முன்தினம் மணிப்புரம் பெட்ரோல் பங்க் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்றுக்கொண்டு இருந்த நபரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் சுத்தமல்லி பாரதியார் தெருவை சேர்ந்த முத்துக்குமார் மகன் சீனிவாசன் (வயது 25) என்பதும், அவர் சட்ட விரோதமாக விற்பனை செய்வதற்காக 40 மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து இருந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

அதேபோல் மதுவிலக்கு போலீசார் நடத்திய சோதனையில் பாளையங்கோட்டை பரதர் தெருவை சேர்ந்த அப்துல்ரகுமான் (27) என்பவர் மதுபாட்டில்கள் விற்றுக்கொண்டு இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து, அவரிடம் இருந்து 7 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com