

புதுக்கடை:
புதுக்கடை போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் சேகர் தலைமையிலான போலீசார் நேற்று தேங்காப்பட்டணம் அருகே உள்ள பனங்கால் முக்கு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது சந்தேகத்திற்கிடமாக நின்ற சந்திரன் (வயது 46) என்பவரை பிடித்து சோதனை செய்த போது அவர் மறைத்து வைத்திருந்த 110 மதுபாட்டில்கள் மற்றும் விற்பனை செய்து வைத்திருந்த ரூ.1,300-ஐயும் பறிமுதல் செய்தனர். மேலும் அவரை கைது செய்தனர்.
இதேபோல் காப்புக்காடு பகுதியில் மது விற்றதாக நகுலன் (61) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 4 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.