ஆர்.கே.பேட்டையில் குட்கா விற்ற 2 பேர் கைது

ஆர்.கே.பேட்டையில் குட்கா விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஆர்.கே.பேட்டையில் குட்கா விற்ற 2 பேர் கைது
Published on

பள்ளிப்பட்டு தாலுகா அடுத்த ஆர்.கே.பேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கடைகளில் தனிப்படை போலீசார் திடீர் சோதனை நடத்தினர். அப்போது ஆர்.கே. பேட்டை அருகே வீரமங்கலம் கிராமத்தில் பிள்ளையார் கோவில் தெருவில் மளிகை கடை நடத்தி வந்த ஆனந்தன் (வயது 47) என்பவர் கடையில் குட்கா போன்ற புகையிலை பொருட்கள் வைத்து விற்பனை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து ஆனந்தை கைது செய்த போலீசார் அவர் கடையில் இருந்த 35 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். பின்னர் அதே பகுதியில் கிஷோர் குமார் என்பவர் நடத்தி வந்த பெட்டி கடையில் சோதனை செய்தபோது 15 கிலோ குட்கா பொருட்கள் சிக்கியது. போலீசார் கிஷோர் குமாரை கைது செய்து அந்த கடையில் இருந்த குட்கா பொருட்களை பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com