மோட்டார் சைக்கிளில் மான்கறி எடுத்துச்சென்ற 2 பேர் பிடிபட்டனர்

ஆம்பூர் அருகே மோட்டார் சைக்கிளில் மான்கறி எடுத்துச்சென்ற 2 போ பிடிபட்டனர்.
மோட்டார் சைக்கிளில் மான்கறி எடுத்துச்சென்ற 2 பேர் பிடிபட்டனர்
Published on

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் ஓ.ஏ.ஆர். தியேட்டர் சிக்னலில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனை நடத்தினர்.

விசாரணையில், தர்மபுரி மாவட்டம் ராமகுண்டா அள்ளி பகுதியை சேர்ந்த ஜெயபால் (வயது 51), ராஜா தோப்பு பகுதியை சேர்ந்த சிவா (வயது 33) என்பதும், திருத்தணியை அடுத்த பள்ளிப்பட்டு பகுதியில் இருந்து ஒரு சாக்கு பையில் 10 கிலோ எடையுள்ள மான் கறியை தர்மபுரி பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்றதும் தெரியவந்தது.

இதையடுத்து 2 பேரையும் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து வனத்துறையினர் மான் கறி மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்து, அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com