இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த 2 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு

போலீஸ்காரர் என்று மிரட்டி இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த 2 பேரை போலீசார் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தனர்.
இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த 2 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு
Published on

காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வடமங்கலம் பகுதியில் கடந்த டிசம்பர் மாதம் வேலைக்கு சென்ற இளம்பெண்ணை தாங்கள் போலீஸ்காரர்கள் என்று கூறி மிரட்டி 2 பேர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர். இதுதொடர்பாக ஸ்ரீபெரும்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த செங்கல் சூளைமேடு கிராமத்தை சேர்ந்த பிரகாஷ் (வயது 31), அதே பகுதியை சேர்ந்த நாகராஜ் (32) ஆகிய இருவரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த பிரகாஷ், நாகராஜ் இருவரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் பரிந்துரைத்தார்.

இதையடுத்து மாவட்ட கலெக்டர் ஆர்த்தி இருவரையும் குண்டர் சட்டத்தில் அடைக்க உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com