தொழிலாளியை தாக்கிய 2 பேர் கைது

திண்டுக்கல் அருகே தொழிலாளியை தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
தொழிலாளியை தாக்கிய 2 பேர் கைது
Published on

திண்டுக்கல் அருகே உள்ள பொன்மாந்துறை புதுப்பட்டி, நல்லேந்திரபுரத்தை சேர்ந்தவர் அன்பழகன் (வயது 32). கூலித்தொழிலாளி. நேற்று முன்தினம் இவர், பொன்மாந்துரை புதுப்பட்டி சாலையில் நடந்து சென்றார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த ஜெயகிருஷ்ண கண்ணன் (20), காடு என்ற அன்பழகன் (20) ஆகிய 2 பேரும் சேர்ந்து அன்பழகனை வழிமறித்து தகராறில் ஈடுபட்டனர். மேலும் அவரை உருட்டுக்கட்டையால் தாக்கினர். இதில் காயமடைந்த அன்பழகனை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் திண்டுக்கல் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மலைச்சாமி வழக்குப்பதிவு செய்து, அன்பழகனை தாக்கிய ஜெயகிருஷ்ண கண்ணன், காடு என்ற அன்பழகன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com