மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்த 2 பேர் கைது

நெல்லை அருகே மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்த 2 பேர் கைது
Published on

நெல்லை அருகே முன்னீர்பள்ளம் கோபாலசமுத்திரம் கோதன்குளத்தை சேர்ந்தவர் மாடசாமி (வயது 42). இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் மதன். இவர்களுக்குள் முன்பகை இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் சம்பவத்தன்று மாடசாமியின் மோட்டார் சைக்கிளை மதன் (23), பரமசிவன் (52) ஆகியோர் சேர்ந்து தீ வைத்து எரித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாடசாமி முன்னீர்பள்ளம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com