

கடையம்:
கடையம் அருகேயுள்ள வடக்கு மடத்தூரில் கடையம் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது டிராக்டரில மணல் கடத்தியதாக சீனியாபுரம் தங்கராஜ் மகன் மாயாண்டி (வயது 25), மாடியனூர் ஆறுமுகராஜ் மகன் மாரிராஜா (22) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மணல் கடத்த பயன்படுத்திய 2 டிராக்டர்கள் மற்றும் ஒன்றரை யூனிட் மணலும் பறிமுதல் செய்யப்பட்டது.