முகப்பேர், நொளம்பூர் பகுதியில் வீடுகளில் திருடிய 2 பேர் கைது - 50 பவுன் நகை பறிமுதல்

முகப்பேர், நொளம்பூர் பகுதியில் வீடுகளில் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 50 பவுன் நகை பறிமுதல் செய்தனர்.
முகப்பேர், நொளம்பூர் பகுதியில் வீடுகளில் திருடிய 2 பேர் கைது - 50 பவுன் நகை பறிமுதல்
Published on

சென்னை நொளம்பூர், முகப்பேர் பகுதிகளில் உள்ள வீடுகளின் பூட்டு உடைக்கப்பட்டு நகை, பணம், வீட்டு உபயோக பொருட்கள் திருட்டு போவதாக நொளம்பூர் மற்றும் முகப்பேர் போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. கடந்த வருடம் மார்ச் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையிலான புகார்கள் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் திருடனை தேடி வந்தனர்.

கடந்த 4 நாட்களுக்கு முன்பு அம்மா உணவகத்தில் வேலை செய்து வரும் மாற்றுத்திறனாளியான சுகந்தம் என்பவரது வீட்டில் 17 பவுன் நகை திருடு போனதாக நொளம்பூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. இதையடுத்து திருமங்கலம் உதவி கமிஷனர் வரதராஜூலு தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்தி வந்தார்.

இந்தநிலையில் இந்த திருட்டு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் (வயது 24) என்பவரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். அவரிடமிருந்து 15 பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அவர் கொடுத்த தகவலின்பேரில் ஓட்டேரியை சேர்ந்த கார்த்திக் (35) என்பவரையும் போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 35 பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டது. நொளம்பூர், முகப்பேர் பகுதிகளில் கடந்த 9 மாதங்களாக இவர்கள் இருவரும் தொடர் திருட்டில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com