பெண் உள்பட 2 பேர் கைது

வாலிபரை தாக்கிய வழக்கில் பெண் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
பெண் உள்பட 2 பேர் கைது
Published on

பொள்ளாச்சி

கேரளாவை சேர்ந்தவர் விஷ்ணு (வயது 29). இவருக்கும் தேனியை சேர்ந்த முத்துமாலை என்கிற பெண்ணுக்கும் இடையே பழக்கம் இருப்பதாக தெரிகிறது. இந்த நிலையில் பஸ் நிலையத்தில் அந்த பெண்ணை உட்கார வைத்து விட்டு விஷ்ணு சென்றார். பின்னர் சிறிது நேரம் கழித்து அவர் குடிபோதையில் அங்கு வந்ததாக தெரிகிறது. பின்னர் திடீரென்று அங்கு நின்று கொண்டிருந்த சுரேஷ் (32) என்பவரிடம் அவர் தகராறில் ஈடுபட்டார்.

மேலும் ஆத்திரத்தில் விஷ்ணுவும், முத்துமாலையும் சேர்ந்து சுரேசை கல்லால் தாக்கி பணம் பறிக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த சுரேசை அக்கம், பக்கத்தினர் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பொள்ளாச்சி மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விஷ்ணு, முத்துமாலை ஆகியோரை கைது செய்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com